அருட்சகோதரர் 'ஸ்டீபன் மத்தியு  2014' வெற்றிக் கிண்ணத்திற்காக கல்முனை டொல்பின் வி.க நடாத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கார்மேல் பாத்திமா கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது நற்பிட்டிமுனையின் ப்றேவேர் விளையாட்டுக் கழகமும் பாண்டிருப்பு சல்லேஞ்ஜெர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டது.

இவ்விறுதிப் போட்டியில் நற்பிட்டிமுனை ப்றேவேர் அணி 10 ஓவரில் 107 ஓட்டங்களை பெற்று உறுதியான இலக்கை எதிரணிக்கு வெற்றி இலக்காக தீர்மானித்தது. 

எனினும் எதிரணி ப்றேவேர் அணியின் துல்லியமான பந்து வீச்சு சிறந்த களத்தடுப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் சொற்ப ஓட்டங்களுள் சுருண்டது.

இதில் அணித்தலைவர் ரிலாஸ் அசீசுல்லாஹ், கமீர் லிஹாஸ் கிபாஸ் மற்றும் இஸ்மத் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டம் பந்துவீச்சு என்பன எதிரணியை சிதறடித்தது.

இப்போட்டியில் பரிசில்களை அருட்சகோதரர் எஸ்ஏ.ஸ் ரீபன் மத்தீயு உட்பட டொல்பின் கழக அங்கத்தவர்கள் வழங்கி வைத்தனர்.

சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்குகொண்டு ஒரு மாதகாலமாக இந்த சுற்றுப்போட்டி நடை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top