அகில இலங்கை அரசாங் பொது ஊழியர் சங்கமும்,வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும்  இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் மே தின ஊர்வலம்  இன்று கல்முனை நகரில் இடம் பெற்றது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் உட்பட  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பல உறுப்பினர்களும், வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிப்படுத்தும் சங்க அங்கத்தவர்கள் பலரும்  ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் முடிவில் கல்முனை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் பொதுக் கூட்டமும் நடை பெற்றது.
கருத்துரையிடுக

 
Top