உலக தொழிலாளர் தினத்தை நினைவூ கூரும் வகையில் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த ஆலய வழிபாடும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வங்கும் நிகழவூம் மே தின அமைதி ஊர்வலமும் இன்று காலை பாண்டிருப்பு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றது.

பாண்டிருப்பு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் லயன் ஸ்ரீரங்கன் தலைமையில் இடம் பெற்ற மே தின வைபவத்தில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாக கலந்து தொழிலாளர்களுக்காகவூம் அவர்களது பிள்ளைகளுக்காகவூம் ஆலய வழிபாடு செய்தார். மாணிக்கப் பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ  சபாரெத்தினம் குருக்கள் தலைமையில் ஜனாதிபதிக்கும்இ இந்த நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்கும் விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.பாண்டிருப்பு பிரதேசத்தில் கல்வி கற்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உதவூம் கரங்கள் அமைப்பின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கப் பட்டதுடன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் வரை மேதின அமைதி ஊர்வலமும் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் பியசேனஇ பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏ.எம்.றியாஸ் உட்பட ஆலயத் தலைவர்கள்இபாடசாலை அதிபர்கள்இவிளையாட்டுக் கழக உறுப்பினர்கள் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top