ஜீ
.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு சகல பாடசலை அதிபர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜி. ஏ. ஆர். தேவப்பிரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த வருட இறுதியில் நடைபெறும் பரீட்சைக்கு சுமார் நான்கு இலட்ச பாடசாலை மாணவர்கள் தோற்றுகின்றனர்.

அவர்களில் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களே இதுவரை கிடைத்துள்ளன.

இம்மாதம் 31ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதால் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் எஞ்சியுள்ள மாணவர்களின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வைக்க பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறினார்.

கருத்துரையிடுக

 
Top