இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சைகளிலிருந்து 140 பேர் நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.இதில் 33 பேர் தமிழர்களும் முஸ்லிம்களும் ஆகும் . இந்த விபரம் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. 
இவர்களில் 107 பேர் சிங்களவர்கள். மீதி 33பேரில் 13 பேர் முஸ்லிம்கள். 20 பேர் தமிழர்கள். 33பேரில் 11 பேர் வடக்கையும் 16 பேர் கிழக்கையும் மீதி 06 பேர் ஏனைய மாகாணங்களையும் சேர்ந்தவர்களாவர். 
கிழக்கில் தெரிவான தமிழர் முஸ்லிம்கள் விபரம்  , திருமதி என்.எச்.றியாசா (மருதமுனை), எ.எம்.ஹன்சீன் ( சாய்ந்தமருது), திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு), செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு), சோதீஸ்வரன் சுரநுதன் (காரைதீவு) எம்.பி. மைதிலி (திருகோணமலை), திருமதி பி.ஜிகானா (மருதமுனை), திருமதி எம்.ஜே.பாத்திமா றிவ்கா(ஏறாவூர்), ரி.ஜெயந்தன் ( திருகோணமலை), திருமதி. வி.நிதர்சினி (பாண்டிருப்பு-கல்முனை), திருமதி எ.றிஸ்மியாபானு (ஓட்டமாவடி), எ.ஜி.பஸ்மில் (பாலமுனை), ஆர்.சுதர்சன்(களுவாஞ்சிக்குடி), எஸ்.எம்.ஹைதர்அலி (மத்தியமுகாம்), எ.எம்.றிசாத் (அக்கரைப்பற்று), திருமதி.கே.ஜெயந்திமாலா (குறுமண்வெளி). 

கருத்துரையிடுக

 
Top