இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் இலங்கிவந்த இம்போர்ட்மிர்ர் நெற்வேர்க் 
புதுப்பொலிவுடன் புதுயுகம் படைக்க தயாராக தனது முன்னெடுப்புக்களை மேற்கொண்டு செல்கின்றது. இம்போட்மிர்ர் மீடியா நெட்வேர்க்கின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் நேற்று இடம்பெற்றது.

மேற்படி இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை
தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது “ஒலியமுதம்” நூல் வெளியீடும் அதிகள் மற்றும் இம்போட் மிரரின் சிரேஸ்ட அறிவிப்பாளர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்நிகழ்வுகள் யாவும் இம்போட்மிர்ர் மீடியா நெட்வேர்க்கின் பணிப்பாளர் எஸ்.எல். முனாஸ் அவர்களின் தலைமையில் இடம்பற்றது குறிப்பித்தக்கது.

கருத்துரையிடுக

 
Top