எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாண்டிருப்பு விஸ்வ பிரம்ம குல இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் மாபெரும் சித்திரை விளையாட்டுப் போட்டியூம் களியாட்ட நிகழ்வூகளும் எதிர் வரும் 18இ19இ20 ஆகிய மூன்று தினங்கள் நடை பெறவூள்ளது.
முதல் தினமான 18ஆந் திகதி  காலை 7.00 மணிக்கு  சைக்கிள் ஓட்டப்போட்டி பாண்டிருப்பில் ஆரம்பித்து மட்டக்களப்புக்குச் சென்று மீண்டும் பாண்டிருப்பை வந்தடையவூள்ளது. மறுநாள் 19 ஆந் திகதி காலை 7.00மணிக்கு  மரதன் ஓட்டம் பாண்டிருப்பில் இருந்து ஆரம்பித்து கல்முனைக்குச் சென்று  மீண்டும் பாண்டிருப்பு ஊடாக  கல்லாற்றைச் சென்றடைந்து மீண்டும் பாண்டிருப்பை வந்தடையூம்.
அன்றய தினம் மாலை2.00 மணி தொடக்கம்  பாண்டிருப்பு காளி கோவிலுக்கு அருகாமையில் உள்ள வேல்முருகு அரங்கு மைதானத்தில் சுவட்டு மைதான களியாட்ட போட்டி நிகழ்வூகள் இடம் பெறும்.
மூன்றாம் நாளான 20ஆந் திகதி  மாலை 2.00 மணிக்கு மாபெரும் இறுதிப் போட்டி நிகழ்வூகளும்  மாலை 6.00 மணிக்கு பரிசளிப்பு வைபவமும் இடம் பெறவூள்ளது.
சைக்கிள் ஓட்டம்இ மரதன் ஆகிய போட்டிகளில் பங்கு பற்ற விரும்புபவர்கள்  பாண்டிருப்பு 02 பிரதான வீதியில்  அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர்  ஸ்ரீ அரசடி அம்பாள் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள  ஸ்ரீ சாஸ்தா ஜூவலரி  மற்றும் எல்.ஜே.வை நகை தொழிலகம் ஆகிய இடங்களில்  தங்களை முன்பதிவூ செய்து கொள்ளுமாறு கேட்கப் பட்டுள்ளது. பதிவூ முடிவூத் திகதி 16.04.2014 வரை என வரையறுக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் ஓட்ட வெற்றியாளருக்கு  பெறுமதி மிக்க தங்க ஆபரணம் பரிசாக வழங்ப்படுவதுடன் மரதன் முற்று முழுதாக இலவசமாக  நடாத்தப்படவூள்ளதால்  முன் பதிவூகளை குறித்த இடங்களில் இலவசமாக மேற் கொள்ளலாமென பாண்டிருப்பு விஸ்வ பிரம்ம குல இந்து இளைஞர் மன்றம்  தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

 
Top