பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அறிவூறுத்தலுக்கிணங்க கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களை வலுவூ+ட்டும் நடமாடும் சேவை நேற்று  08-04-2014 நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாககலந்துகொண்டார். இங்குபொது மக்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்.நடமாடும் சேவையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கானஉடனடிதீர்வூகளும்  வழங்கப்பட்டன.

தூய பசும்பாலை மக்கள் அருந்தும் பழக்கத்தை அதிகரிக்கும் கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்களத்தின் திட்டத்தின் கீழ் இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தூய பசும்பால் வழங்கப்பட்டன.

Post a Comment

 
Top