இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நாளை முதல் செயற்படவுள்ளது.
மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக மத விவகாரம் தொடர்பான அதிக முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top