எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளதை முன்னிட்டும் பல்கலைக்கழகத்தின் ஏனைய நிலவரங்களை ஆராய்வதற்காகவும் மாண்புமிகு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று காலை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்திருந்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் நீதி அமைச்சரை வரவேற்று எதிர்வரும் 2014-04-20 ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கட்டிடங்களின் இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களை சுற்றிக்காண்பித்ததுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் விபராமாக எடுத்துக்கூறினார்.இந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார் அவர்களும் விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக் அவர்களும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச்.நபார் அவர்களும் பிரசன்னமாய் இருந்தனர்.

கருத்துரையிடுக

 
Top