சாய்ந்தமருது பிரதேசத்தின் கல்வி பொருளாதார ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுகின்ற சபையாக 99 மரைக்காயர்மார்களைக் கொண்ட சாய்ந்தமருது புதிய நம்பிக்கையாளர் சபை செயல்படும் என நம்பிக்iயாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனீபா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையினால் ஐந்தாம் தர புலமைப் பரீட்சைஇ கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைகளில் சாதனை படைத்த 100 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவூள்ளனர். இந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா  அடுத்த மாதம்(மே) 04ஆம் திகதி நடை பெறவூள்ளது.
இவ்விழா தெடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று திங்கட் கிழமை(28) இரவூ சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளி வாசல் அலுவலக மண்டபத்தில் நம்பிக்கையாளர் சபை தலைவர் வை. எம்.ஹனீபா தலைமையில் நடை பெற்றது. நம்பிக்கையளர் சபை அங்கத்தவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தலைவர் வை.எம்.ஹனீபா அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் சாய்ந்தமருதில் உள்ள அனைத்து நிறுவனங்களையூம் ஒருங்கிணைத்து செயல்படுத்துகின்ற நிறுவனமாக பள்ளிவாசல்கள் உள்ளதால் அதன் அடிப்படையில் உலமாக்களும் நம்பிக்கையாளர் சபையினரும் இணைந்து ஊரின் நலன் கருதி பல திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்முனை ஸாஹிரா கல்லூயில் அசாதாராண சூழல் நிலவியது. எமது ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் எமது பிரதேச அரசியல் பிரதி நிதிகளின் ஒத்துழைப்புடன் அப்பாடசாலை சூழலை நல்ல நிலைக்கு கொண்டுவர முடிந்துள்ளது. கல்வி வீழ்ச்சி என்ற எண்ணத்தை மனதில் வைத்திருந்த எமது பகுதி மக்களுக்கு தற்போதை நிலை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றத்தை மேலும் உயர்த்தும் நிலையில்தான் இந்த சாதனையாளர் கௌரவிப்பும் இடம் பெறவூள்ளது.

சாய்ந்தமருதில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய மரைக்காயர் சபையினரின் குறிக்கோள் வெற்றியளித்துள்ளது. எங்கள் ஊர் பற்றிய குறைகளை ஊடகங்கள் எடுத்த எடுப்பில் வெளி உலகுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் எங்களிடம் எடுத்துக் கூறுங்கள் எங்களால் திருத்தவூம் நாங்கள் திருந்தவூம் வாய்ப்பிருக்கிறது. ஏங்களின் நிறைவான விடயங்களை பகிரங்கப் படுத்துவதன் மூலம் அது எங்களை ஊக்கப் படுத்தும் செய்தியாக அமையூம் என நம்பிக்iயாளர் சபை தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்தார். எமது நிருவாக சபையில் 16 குழுக்கள் செயல் படுகின்றன அதன் மூலம் எங்களின் எதிர்காலத் திட்டங்கள் பல வெற்றியடையூம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
எதிர்வரும் 04ஆந் திகதி நடை பெறவூள்ள சாதiயாளர் கௌரவிப்பு விழாவில்  எமது பிரதேசத்திலுள்ள 07 பாடசாலைகளில் இருந்து ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 32 மாணவர்களும்இ மூண்று பாடசாலைகளில் இருந்து சாதாரண தரப் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற 68 மாணவர்களும் கௌரவிக்கப்படவூள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.கருத்துரையிடுக

 
Top