கல்முனை மாநகர சபைக்கு கணக்காளராக சாய்ந்தமருதை சேர்ந்த எச்.எம்.றசீட் நியமிக்கப் பட்டுள்ளதாக  நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது. கல்முனை வலயக்கல்வி அலுவலகம்,கணக்காய்வு திணைக்களம்,பொலிஸ்  திணைக்களம் என்பவற்றில் நீண்ட காலம் சேவையாற்றிய இவர் தற்போது கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.

மே 02ஆந்  திகதி மாநகர சபையில் கடமைகளை பொறுப்பேற்பார் எனவும்  தற்போது பதில் கடமை புரியும் கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முழு நேரக் கடமை புரிவார் எனவும் அறிய முடிகின்றது .
இந்த நியமனம் இன்று கிழக்கு மாகாண  சபையில்  வழங்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top