சாய்ந்தமருதில் உள்ள வாசைன திரவியங்கள் விற்பனை செய்யூம் வர்த்தக நிலையம் ஒன்றில் களவடப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கல்முனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் களவாடியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன் தினம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
சம்வம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பெருங் குற்றத் தடுப்பு பிரிவூக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் சாய்ந்தமரு மாவடி வீதியில் உள்ள கிறீன் ஹவூஸ் மற்றும் கல்முனை ஸாஹிரா வீதியில் உள்ள மற்றுமொரு வர்த்தக நிலையங்களுக்கு விற்பனைக்கான பொருட்களை வாகனத்தில் எடுத்துச் சென்ற வாகன சாரதி உட்பட உதவியாளர்கள் மூவர் குறித்த வர்த்தக நிலையங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு அங்கிருந்த ஐந்து இலட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து நாற்பது ரூபா பெறுமதியான பால்மா வகைகளை களவாடி  சாய்ந்த மருது பிரதான வீதியில் உள்ள மற்றுமொரு கடையில் விற்பனை செய்துள்ளனர்.
குறித்த சம்வம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவூ பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மேற் கொண்ட இரகசிய விசாரணையை தொடர்ந்து களவூ போன வர்த்தக நிலையத்துக்கு பொருட்கள் எடுத்துச் சென்ற வாகன சாரதியூம் உதவியாளர் மூவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது உண்மையை ஒப்புக் கொண்டவர்கள் களவாடப் பட்ட பொருட்களைவ விற்பனை செய்த மற்றய வர்த்தக நிலையத்தையூம் அதன் உரிமையாளரின் தகவலையூம் வழங்கியூள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் களவாடப்பட்ட குறித்த பெறுமதியான பொருட்களும் அப்பொருட்களை கொள்வனவூ செய்த குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும் கல்முனை பெருங்குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஜவரையூம் பொலிஸார் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது களவாடப்பட்ட பொருட்களை கைப்பற்றியதுடன் அப்பொருட்களை கொள்வனவூ செய்த வர்த்தகரை நீதிபதி அவர்கள் எச்சரித்து இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்தததுடன் களவாடிய குற்றத்துக்காக மற்றய நால்வரையூம்  எதிர்வரும் 23 ஆந்த  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
;

கருத்துரையிடுக

 
Top