கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாவணை விஷ்ணு கோவில் வீதியில் கடற்கரையை அண்மித்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (14) இரவு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீரமுனை அரசடி வீதியைச் சேர்ந்த சிவநேசத்துரை ராமச்சந்திரன் (வயது 50) எனும் 06 பிள்ளைகளின் தந்தையுடைய சடலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரின் மனைவி முருகன் சித்தரா தகவல் தருகையில்; “எனது கணவர் மருதமுனையைச் சேர்ந்த மாகாண அமைச்சின் செயலாளரிடம் கூலி வேலை செய்பவர். அவரிடம் சம்பளம் பெற்று என்னிடம் தருவார். அடிக்கடி மதுபானம் பாவிப்பது அவரது வழக்கமாக இருந்து வந்தது” என்று தெரிவித்தார்.

இறந்தவரின் சடலம் தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது  இவரது மரணம் தொடர்பில் கல்முனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

 
Top