அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஆட்சியில் உள்ள  நாவிதன்வெளி பிரதேச சபைக்கு  முதல் தடவையாக அரச தரப்பு  மாகாண  சபை அமைச்சர் ஒருவர்  இன்று விஜயம் செய்துள்ளார் .

நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கண்டறியும் உயர் மட்டக் கூட்டம்  இன்று நாவிதன் வெளி பிரதேசசபை  அலுவலகத்தில் நடை பெற்றது .

கிழக்கு மாகாண  கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  பிரதேச சபை பிரதி தலைவர் ஏ.ஆனந்தன், உறுப்பினர்களான எஸ்.குணரத்தினம்,எம்.எஸ்.ரஜாப்தீன் .ஏ.கே.அப்துல் சமட் ,ஏ.சுதர்சன்,வை.தேவன்  மற்றும் சம்மாந்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜாபீர் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.செல்வநாதன் உட்பட கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர் சகாய சீலன் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.


நாவிதன் வெளி பிரதேசத்தில் நிலவும் கல்வி குறைபாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதோடு முன்னுரிமைப்படுதப்பட்ட தேவைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டுள்ளது .

அரச தரப்பை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நாவிதன் வெளி பிரதேச சபைக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும்  அந்தவகையில் கிழக்கு மாகாண  கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்காவுக்கு நாவிதன் வெளி பிரதேச மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும்  நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.ரஜாப்தீன் அங்கு உரையாற்றும் போது  தெரிவித்தார் . 

கருத்துரையிடுக

 
Top