கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதில் இன்று பிற்பகல் 03.04.2014 இடம் பெற்ற வாகன விபத்தில் சாய்ந்தமருது மாளிகைகாடு பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்  விபத்து இடம் பெற்ற இடத்தில மரணமடைந்துள்ளார் .

மரணமடைந்தவர்  மாளிகை காட்டை சேர்ந்த 28 வயதுடைய அகமது லெப்பை முகம்மது ஜெரீஸ் என பொலிசார் தெரிவித்தனர் 

கல்முனை மாநகர சபை நகர சுத்திகரிப்பு இயந்திரத்துடன் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் வந்தவரே இவ்வாறு இறந்துள்ளார் . இச்சம்பவம் இன்று மாலை 5.00 மணியளவில் சாய்ந்தமருது தபாலகத்துக்கு முன்பாக இடம் பெற்றுள்ளது. இறந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த  வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது. மாநகர சபை  உளவு இயந்திர சாரதி கல்முனை பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப் படுகின்றார் 

கருத்துரையிடுக

 
Top