அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் மேதின நிகழ்வுகள் சங்க தலைமையகம் அமைந்துள்ள கல்முனை நகரில் மே முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாகச் சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார். 

சங்கத் தலைவரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில் கல்முனை மெதடிஸ்த மண்டபத்தில் அன்றைய தினம் மேதினப் பொதுக்கூட்டம் இடம்பெறும். அதற்கு முன்னர் கல்முனை நகரில் மேதின ஊர்வலமொன்றும் இடம்பெறும். யுத்தம் முடிவடைந்த பின்னர் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தமது கிளைகளை வடக்கில் புனரமைத்தும், விஸ்தரித்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதால் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களிலிருந்தும் சங்கக் கிளை முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் கல்முனையில் நடைபெறும் 
இந்த மேதின நிகழ்வுகளில் கலந்துகொள்வர் என தலைவர் லோகநாதன் தெரிவித்தார். சங்கத்தின் இணை நிறுவனமான வடக்கு, கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் சங்கத்துடன் ஒருங்கிணைந்து இந்த மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top