பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதி அடைந்து 03 வருடத்தை நினைவு கூரும்  வகையில்  ஸ்ரீ சத்திய சாயி ஆராதனை மகோற்சவ விழா  கல்முனை சத்திய சாயி சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று(26) காலை இடம்  பெற்றது .

ஸ்ரீ சத்திய சாயி பாவா சமாதியடைந்த 2011.04.24 அன்றய தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் கடந்த 24ஆந்  திகதி தொடக்கம் கல்முனை சாயி நிலையத்தில் இரண்டு தினங்கள்  பூசை வழிபாடுகள் இடம் பெற்று இன்று (26) காலை 7.30 மணிக்கு விசேட பூசையுடன்  உலக சாயி சாந்தி ஊர்வலமும் இடம் பெற்றது .

கல்முனை சத்திய சாயி சேவா நிலையத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் கல்முனை -03  ஊடாக தரவை பிள்ளை ஆலயம் வரை சென்று மீண்டும் கல்முனை நகர் ஊடாக பொலிஸ்  வீதி வழியாக வர்த்தக வங்கி சந்தியை சென்றடைந்து மீண்டும்  சத்திய சாயி சேவா நிலையத்தில் மகாமங்கள ஆராதியுடன் நிறைவு பெற்றது .உலக சாயி சாந்தி ஊர்வலத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அடியார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் . ஊர்வலத்தில் அனைத்து மதங்களினையும் பிரதிபலிக்கும் வகையில் சாயி பஜனையும் இடம் பெற்றது.

கருத்துரையிடுக

 
Top