இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரெயினுக்குச் சென்றுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஹ்ரெயின்  அரசாங்கத்தின் உயர் விருதான 'கலீபா விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பஹ்ரெயின் மன்னர்  ஹமாத் பின் இசா அல் கலிபா இந்த விருதை வழங்கினார்.
இரண்டாவது எலிசபேத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
'நட்பு நாடுகளுடன் இலங்கை பேணிவரும் இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் உங்கள் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்தார்.கருத்துரையிடுக

 
Top