கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வூம், பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகள், உபகரணங்கள் என்பன வழங்கும் நிகழ்வூம் நேற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.

கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.எல். அலாவூதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.







ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்ட நிதி உதவியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட புதிய அன்பியூலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினையே இன்று அமைச்சர் மன்சூர் பொத்துவில் மாவட்ட வைத்திய சாலை இ சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கு வழங்கி வைத்தார். அத்துடன் 
பிரதேசத்திலுள்ள  பல வைத்திய சாலைகளுக்கு 85 இலட்சம் பெறுமதியான மருந்துகள், உபகரணங்கள் என்பனவூம் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் கிழக்குமாகாண பிரதம கணக்காளர் உள்ளிட்ட வைத்தியர்கள்இ சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Post a Comment

 
Top