பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையூடன்  வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள புத்தாண்டு மாபெரும் திவி நெகும விற்பனைச் சந்தை இன்று (10) காலை நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை தமிழ் பிரிவூ பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான  பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவூம்இ மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் யூ.ஜி.எல்.அனுருத்த பியதாஸஇ மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவூம் மற்றும் பல அதிகாரிகளும் கலந்து புத்தாண்டு மலிவூ விற்பனைச் சந்தையை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சுயதொழில் புரிபவர்களுக்கான நுண்கடன் திட்டத்தின் கீழ் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த புத்தாண்டுச் சந்தையில் இன மத வேறுபாடின்றி தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டு  பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர். சமுர்த்தி திட்டத்தில் சுய தொழில் புரிவோரின் பல்வேறுபட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
கருத்துரையிடுக

 
Top