கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் 192 ஆவது கொடியேற்று விழா இன்று திங்கட்கிழமை (31-03-2014) மாலை ஆரம்பமானது.
இதன் ஆரம்ப வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர், மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோருடன் உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஊர்ப் பிரமுகர்கள், பொலிஸ் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வை கண்டுகளித்தனர்.
கருத்துரையிடுக

 
Top