பண்டிகை காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்துக்கள் காரணமாக கடந்த 10 நாட்களில் மாத்திரம் 94 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் அனர்த்தங்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தல் போன்ற விடயங்களே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவற்றின் காரணமாக 150 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, சுமார் 243 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுமார் ஆயிரத்து 631 வாகன செலுத்துனர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top