கல்முனை வலயக்கல்வி அலுவலக வீதி உடன் நிர்மாணிக்கப்படும் என்று கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை  உறுதியளித்து வாரங்கள் பல கழிந்து விட்டன .எனினும்  அமைச்சரால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற இந்த வீதியை பயன்படுத்துகின்ற உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர் .

குறித்த வீதியின் அவலநிலை குறித்து எமது ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் சுட்டிக்காட்டி இருந்தது  இந்த செய்திக்கு பலனாக அமைச்சரினால் உடனடியாக வீதி செப்பனிடப்படும் எனவும் பொறியியலாளர் கொழும்பில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 எனினும் இன்னும்  இந்த வீதி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்  உதுமாலெப்பை வாக்களித்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் வலயக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் அசையாத நம்பிக்கையுடன் உள்ளனர் . இந்த நம்பிக்கை  அமைச்சர் உதுமாலெப்பயினால்  உதாசீனம் செய்யப்படக் கூடாதென்பதே ஜப்னா முஸ்லிம் இணையதளத்தின் எதிர் பார்ப்பாகும்.

கருத்துரையிடுக

 
Top