கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர்கல்முனை பிரதேச மாணவர் சமுதாயத்துக்கு கலங்கரை விளக்காய் அமைக்கப்பட்ட பொது நூல் நிலையம் கடந்த 33 வருடங்களாக அபிவிருத்தியடையாதிருந்து வருகிறது. இலங்கையில் முதல்தர நூலகமாக கல்முனை நூலகத்தை முன்னேற்ற புதிய மேயர் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வேண்டு கோளை கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர்  கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது புதிய மேயர் சட்ட முதுமானி  நிஸாம் காரியப்பருக்கு  அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
கல்முனை பொது நூலகத்தின் முக்கியத்துவம் பற்றியூம்இ இப்பொது நூலகமானது நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு ஓர் முன்மாதிரியாக பொலிவூடன் விளங்க வேண்டும்  என்பது பற்றியூம்  கடந்த காலத்தில் மேயர்களாக  கடமையாற்றிய அத்தனை பேர்களுக்கும் நூலகத்தின் அவல நிலை பற்றி காலத்துக்கு காலம்  பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளன.
கல்முனை மாநகர சபையின்;  நித ஒதுக்கீட்டின் மூலமாகவோ  அல்லது  இப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின்  நிதி ஒதுக்கீட்டிலோ  கடந்த 33 வருடங்களாக இந்த நூலகத்தில் எந்த வொரு அபிவிருத்தியூம் மேற் கொள்ளப்பட்டதற்கான வரலாறு இல்லை. மாறாக அந்த நூலக வளாகத்திலிருந்த நிழல் தரும் மரங்கள் மாத்திரமே வெட்டப்பட்டுள்ளன.
கல்முனை பிரதேசத்தில்  பல கல்விக் கூடங்களும் தனியார் கல்வி நிலையங்களும்  இருந்த போதிலும்  பொது மக்களுக்கென்று  அறிவை வளர்க்கும்  ஒரு பூரணமான  பொது நூலகம் இல்லாதிருந்தது. மதப்பற்றும் மொழிப்பற்றும் உள்ள இப்பகுதி வாழ் மக்களுக்கும் இபாடசாலை மட்டத்திலிருந்து  பல்கலைக் கழகம் வரை  உயர் கல்வியை பெறுபவர்களுக்கும்   அம்பாறையில்  உள்ள  ஹாடி தொழில் நுட்ப கல்லூரி மற்றும் கனிஸ்ட தொழில் நுட்ப கல்லூரிகள் ஆகியவற்றில் கல்வி பயிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் அபிவிருத்திக்கு ஏற்ற ஒரு பொது நூலகம் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்தில் 1977 இற்கு முற்பட்ட காலத்தில் இல்லாதிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் கல்முனை மண்ணில் பிறந்து  வளர்ந்து ஒரு இளம் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்த காலத்தில்  தனக்கொரு அரசியல் அதிகாரம் கிடைத்தால் கல்வி அபிவிருத்திக்கு  முதலிடம் கொடுத்து நூலகம் இல்லாப் பெருங்குறையை நீக்கி வைப்பேன் என்று  அவருடைய நெருங்கிய நண்பர்களிடம் கூறியிருந்தார்.
1977இல் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் முஸ்லிம் மக்களினால் தெரிவூ செய்யப்பட்டார். தனது முதல் பணியாக  பாழடைந்து கிடந்த  நீர்த்தேக்கமாகிய குளத்தை நிரப்பி  வனப்பு மிகு வாசிக சாலைக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை அன்றய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக இருந்த ஆர்.ருத்திரநாதன் அவர்களுடன்  ஏ.ஆர்.மன்சூர் 06.11.1977 இல் நாட்டினார். இக்குளத்தில் பொது நூலகத்திற்கான கல் நாட்டு விழா நடை பெற்றதும் கவனிப்பாரற்றுக் கிடந்த குளத்துக்கு உரிமை கொண்டாடி இந்த நல்ல பணிக்கு தடை ஏற்படுத்திய சரித்திரமும் நமக்குத் தெரியூம்.


மலரும் மக்கள் பல்கலைக்கழகமான அறிவூக்கதிர் பரப்பும் கல்முனை பொது நூலகம் நீர் கொழும்பு நகராட்சி மண்ற வாசிக சாலையின் அமைப்பை  பின் பற்றி அமைக்கப்பட்டது.
கல்முனை பொது சன நூலகத்தை முன்னாள் வெளிநாட்டு விவகார அமைச்சர் மர்ஹூம் ஏ.ஸி.எஸ்.ஹமீட் 1981.03.27 இல் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  ஏ.ஆர்.மன்சூரின் அழைப்பின் பேரில் திறந்து வைத்தார். நூலகத்துக்கு தேவையான தமிழ் சிங்கள மொழிகளிலான அத்தனை புத்தகங்களும் இலங்கை தேசிய நூலக சபையின் உதவி நெறியாளராகவிருந்த எஸ்.எம்.கமால்தீன் ஆலோசனை வழிகாட்டலுடனும் ஏ.ஆர்.எம்.மன்சூரின் பெருந் தொகையான நிதி ஒதுக்கீட்டின் மூலமாக  இலங்கை இஇந்தியா போன்ற நாடுகளில் இருந்து கொள்வனவூ செய்யப்பட்டது.
இந்த வரலாற்று உண்மைகளையூம் பௌதீக சூழ்நிலைகளையூம் உள் வாங்கி உருவாக்கப்பட்ட கல்முனை நகரத்தின் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் இந்த நூலகம் எதிர் காலத்தில் இலங்கையில் உள்ள  முதல் தர நூலகங்களைப் போன்று மாவட்ட நூலகமாக  முன்னேற்றமடைய வேண்டும். ஆக்குவது ஒன்று அதனைப் பேணிப்பாதுகாப்பது இன்னொன்று என்று திறப்பு விழா நிகழ்வின் போது கடல் போல் அன்று திரண்டிருந்த மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் மன்சூர் இறுதியாக கூறிய உபதேசம் இன்றும் என்னுள்ளத்தில் மறக்கமுடியாதுள்ளது.
ஒரு பொது நூலகத்தை கட்டி மனித சமுதாயத்துக்கு கொடுப்பது 100 சிறைச் சாலைகளைப் பூட்டுவதற்கு ஒப்பாகும் என்று ஒரு அறிஞன் கூறியூள்ளான்.
உரம் வாய்ந்த உத்தமன் ஒருவனினால்  அமைத்துக் கொடுக்கப்பட்ட  பொது நூலகத்தை இன்று அவதானிக்கும் போது  அழகிழந்து பொலிவிழந்து அன்று திறப்பு விழா கண்ட அதே தோற்றத்தில்  அன்று பூசிய அதே மை மங்கி மறைந்த நிலையில்  காணப்படுகின்றது. நூலகம்  ஆரம்பிக்கும் போது உசாத்துணைப்பகுதி இஇரவல் கொடுக்கும் பகுதி இசிறுவர் பகுதிஇ வாசிப்பு கூடம் இகேட்போர் கூடம் ஆகிய ஐந்து பிரிவூகளைக் கொண்டிருந்தன. அதே ஐந்து பிரிவூகளும்தான்  இன்றுமுள்ளது.  ஒரு புதிய பிரிவூ கூட  இது காலவரைக்கும் எவராலும் ஆரம்பிக்கப்படவில்லை. வாசகர்கள்; நலன் கருதி    மல சல கூடமோ இகுடிநீர் வசதியோ  அமைக்கப்படவில்லை. 
நாட்டின் ஜனாதிபதிஇபிரதம மந்திரி  ஆகியோர்களின் படங்கள் கூட தொங்கவிடப்படவில்லை 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  மேயராக இருந்த  ஒருவரின்  படமே இன்றும் தொங்குகின்றது. நூலகத்தின் முன் முற்றம்  அழகு இன்றி காணப்படுகிறது வாசகர்கள் மற்றும் அங்கு தொழில் புரிபவர்களின்  வாகனங்கள் நிறுத்தி வைக்கக் கூடிய தரிப்பிடமில்லை. நூலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகை கூட மொட்டையாக  காணப்படுகின்றது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கல்முனைக்கு வந்து பொது நூலகத்தை கண்டு பிடிப்பது மிகவூம் கடினமாகும். நூலகத்துக்கு முன்னால் உள்ள பிரதேசத்தைக் கூட மாநகர சபை நிருவகம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 10 வருட ஒப்பந்தத்தில் வாடகைக்கு கொடுத்துள்ளது. இதனால் அந்தப்பிர தேசம் வாகன தரிப்பிடமாகவே காட்சி தருகின்றதை நீங்களும் அவதானிக்கின்றீர்கள். ஆளணி வெற்றிடத்துக்கு அதிகமான பதவியணியினர் கடமைக்கு இருந்தும்  நிர்வாக கட்டமைப்பும்இ மேற்பார்வையூம் அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான குறைபாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும்  நூலகத்தைப்பற்றி  இப்பிரதேச அரசியல் வாதிகள்  கண்டும் காணாதவர்கள் போல் இருந்து வந்துள்ளதுடன்  இதன் முன்னேற்றத்துக்கும்  அபிவிருத்திக்கும்  கடந்த  33 வருடங்களாக  நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் இருந்துள்ளார்கள் என்பதை அறியூம் போது வேதனையூம் கவலையூம் அளிக்கிறது என்று அப்துல் கபூர் எழுதியூள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top