பொருளாதார அபிவிருத்தி அமைச்சினது 3 மில்லியன் ரூபா செலவில் ‘திதுலன– கல்முனை’ 51 அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது வொலிவேரியன்; எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எல்.ஏ. நாபித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,  கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வகுப்பறைக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜெலீல், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பாயிஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஷரீப் ஹக்கீம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை அதிபரினால் பாடசாலை தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தார்.

கருத்துரையிடுக

 
Top