கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் 24ம் திகதி சாய்ந்தமருதி்ல் வைத்து தேசிய காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவுள்ளார். என  நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன்  தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவுடன் இணையும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் ஹோட்டலில்  இடம்பெறவுள்ளது. என தெரிவிக்கப்படுகின்றது.

சிராஸ் மீராசாஹிபின் கட்சி மாற்றம் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்ல முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான தரப்பினர் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top