சம்மாந்துறை  பொலிஸ்  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் எனுமிடத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்து நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையில் மரணித்தவரின் சடலமும் காயமடைந்தவரும் அனுமதிக்கப் பட்டுள்ளன.

நேற்று 07 இரவு தம்புள்ளையில் இருந்து மரக்கறி ஏற்றி வந்த லொறி அட்டப்பள்ளம் பெரியபாலத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு 11.00 மணிக்கு இடம் பெற்ற சம்பவத்தில் பலியானவர் 48 வயதான அக்கரைப்பற்றை சேர்ந்த இப்ராஹீம் லெப்பை அப்துல் மஜீத் என்பவராவார் . காயமடைந்தவர் அக்கரைப்பற்றை சேர்ந்த வெள்ளத்தம்பி ரஹீம் என்பவராகும்.
இந்த விபத்து தொடர்பாக சம்மாந்துறை பொலிசார் விசாரணை செய்கின்றனர்  வேக கட்டுப்பாட்டை மீறியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளை தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள ரஹீம் என்பவரே வாகனத்தை செலுத்தி வந்ததாக சம்மாந்துறை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

 
Top