அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கே மு.கா. ஆதரவு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் கோருவதற்காக அரசாங்கத்தை விட்டு விலகிக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில உள் நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்ற சதித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். வத்தளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதனை உறுதி செய்வதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கியது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாப தியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில், கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top