கல்முனை மாநகர சபையின் சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பிலான விசேட செயலமர்வு ஒன்று ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று (27-03-2014) காலை தொடக்கம் சாய்ந்தமருது சீபிரீஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களது நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹீர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கல்முனை மாநகர சபை எதிர்நோக்கும் சுகாதார ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.
குறிப்பாக தின்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள், விலங்கறுமனை (மாட்டு மடுவம்) நிர்மாணம் மற்றும் பராமரிப்பு, சுகாதாரத் தொழிலாளர்களை வலுவூட்டுதல், சுற்றாடல் பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.அப்துல் மஜீத், மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாருக், சுற்றாடல் அதிகார சபையின் கிழக்குப் பிராந்திய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், கரையோரப் பாதுகாப்பு திணைக்கள இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலக பொறுப்பாளர்- பொறியியலாளர் எம்.எம்.முர்ஷிதா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.சி.எம்.சீ.முனீர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் கே.எல்..எம்.ரயீஸ், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆகியோருடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top