நடைபெற்று முடிந்த மேல் மாகாண சபையின் களுத்துறை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 337,924 ஆசனங்கள் - 13, ஐக்கிய தேசியக் கட்சி – 144,924 ஆசனங்கள் - 06, ஜனநாயக் கட்சி – 43,685 ஆசனங்கள் - 02 மக்கள் விடுதலை முன்னணி – 25,366 ஆசனங்கள் - 01,

களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு ஆசனத்தை இம்முறைத் தேர்தலில் எதிர்பார்த்திருந்தது. இருந்தபோதிலும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸினை நிராகரித்துள்ளனர்.

குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை களுத்துறை மாவட்ட முஸ்லிம்களை கௌரவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை அஸ்லம் அவர்களுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top