கிண்ணியா பிரதேசத்தில் பாம்பு போன்ற கடல் உயிரினங்கள் இன்று (26) புதன்கிழமை படையெடுத்து வெளிவந்துள்ளது.

இவ் உயிரினம் இன்று கிண்ணியா பிரதேசத்தில் இடிமண், காக்கா முனை , குட்டிக் கராச் மற்றும் குறிஞ்சாக்கேணி ஆகிய கலப்பு பாலங்களில் பெருமளவு படையெடுத்துள்ளது.

கடந்த வருடம் அதற்கு முந்திய வருடம் மற்றும் கடந்த ஜனவரி மாதம் என இதுவரை நான்கு முறை இவ் உயிரினங்கள் வெளிவந்துள்ளது.

இந்த உயிரினத்தைப் பார்வையிடுவதற்காக இன்று பெருந்திரளான மக்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.

Post a Comment

 
Top