இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 89 ஓட்டங்களையும் டில்ஷான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். 

இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 19.2 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. 

இங்கிலாந்து அணி சார்பில் அலக்ஸ் ஹெல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 

கருத்துரையிடுக

 
Top