2013 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்புக்களில் இருந்து பிரித்தெடுப்புக்களை  விண்ணபிக் கின்றவர்களுக்கு  அவற்றை வழங்க கட்டுப் பட்டுள்ளமையால்   அம்பாறை மாவட்ட ஆசிரிய ,ஆசிரியைகளிடமிருந்து   பெறும்  விண்ணப்பங்களுக்கு  பிரிதெடுப்புக்களை  விநியோகிப்பதற்கு   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்தல் விடுத்துள்ளார் .

எவ்வாறாயினும் பிரித்தெடுப்புகளுக்கான  விண்ணப்ப பத்திரங்களை கையேற்கும் முன் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரித்தெடுப்புக்களை 2014.03.24 ஆந் திகதிக்கு முன் விநியோகிக்க முடியாதெனவும் 2014.04.30 ஆந்  திகதிக்கு முன்னரேயே விநியோகிக்க முடியும் எனவும்  விண்ணப்ப காரர்களுக்கு அறிவிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு  வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .

அவசர தேவை ஒன்றாயின் பிரிதெடுப்புக்களை   கொள்வதற்காக  கட்டணம் செலுத்தப்பட்ட  மஞ்சள் நிற பற்றுச் சீட்டை  சமர்ப்பிக்கும் படியும்  தேர்தல்கள்  திணைக்களத்தில் இருந்து பிரிதெடுப்புகை கிடைக்கப் பெற்றதன் பின்னர்  அந்நிறுவனத்துக்கு   சமர்ப்பிக்கும் படி  விண்ணப்ப தாரர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்தல் விடுத்துள்ளார் .
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தால்  ஆசிரியர் விபரம் திரட்டப்படுவதற்கான விண்ணப்பத்தில் வாக்காளர் பட்டியல் கேட்கப்பட்டுள்ள தை  அடுத்தே  தேர்தல்கள் திணைக்களத்தால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top