அவளின் சந்தோசமே நாட்டின் சந்தோசம் என்ற தொனிப் பொருளில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமிய மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின வைபவமும் ,மகளிர் சுய தொழில் உற்பத்திக் கண்காட்சியும் சனிக்கிழமை  (15) பாண்டிருப்பு கலாச்சார மத்திய  நிலையத்தில் நடை பெற்றது.

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவ நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகவும் சட்டத்தரணி ஜனாபா .ஆரிகா காரியப்பர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.


Post a Comment

 
Top