கிழக்கு மாகாண  விவசாய கால் நடை  அபிவிருத்தி  கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கால் நடை அபிவிருத்தி திணைக்களத்துக்கு  பணியாற்றவென  போட்டிப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 11 பேருக்கு  கால் நடை அபிவிருத்தி  போதனாசிரியர் பதவிக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் வழங்கும் வைபவம் நேற்று 18.03.2014 மாலை 4.00 மணிக்கு கிழக்கு மாகாண  விவசாய கால் நடை  அபிவிருத்தி  கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.

கிழக்கு மாகாண  விவசாய கால் நடை  அபிவிருத்தி  கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் தலைமையில் இடம்  பெற்ற நிகழ்வில்  கிழக்கு மாகாண  விவசாய கால் நடை  அபிவிருத்தி  கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  இசட்.ஏ.நஸீர்  அஹமட்  பிரதம அதிதியாக கலந்து  கொண்டு நியமனக் கடிதங்களை  வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண   கால் நடை  அபிவிருத்தி திணைக்களத்தின்  மாகாணப் பணிப்பாளர் டாக்டர் ரீ.கே.தவராஜா  உட்பட திணைக்கள அதி காரிகள் பாலும் பலரும் கலந்து கொண்டனர் . நியமனம் வழங்கப்பட்டுள்ள  11 பேருக்கும் 03 நாள் பயிற்சி வழங்கும் பொருட்டு திருகோணமலை கிழக்கு மாகாண  விவசாய கால் நடை  அபிவிருத்தி  கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கீழான பயிற்சி நிலையத்தில் இணைக்கப் பட்டுள்ளனர். இந்த நியமனத்தில்  தமிழ் முஸ்லிம் சிங்கள  இனத்தை சார்ந்த 04 ஆண்களும் 07 பெண்களும் இணைக்கப் பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top