கல்முனை நகர் அருள் வளர்  கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேர் திரு விழா  திங்கட்கிழமை (17)  இன்று வெகு சிறப்பாக நடை பெற்றது. கடந்த 07ஆந்  திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான பிரமோற்சவ திரு விழா  தொடர்ச்சியாக 10 தினங்கள் திரு விழாக்கள் நடை  பெற்று இன்று தேர் திரு விழா நடை பெற்றது . ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான இத் தேர் திரு விழா கல்முனை நகர் ஊடாக வலம்  வந்து மீண்டும் சந்தை வீதி ஊடாக ஆலயத்தை சென்றடைந்தது.
இந்த தேர் திரு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து  கொண்டு தங்கள்  நேர்த்திகளை நிறைவேற்றினர் .  மகோற்சவ பிரதம குரு  கிரியாமணி வேதாகம வித்தகர் ,கிரியா சக்கரவர்த்தி  பிரம்ம ஸ்ரீ  சுந்தர செந்தில் சிவாச்சாரியார்  தலைமையில் கிரியை வழிபாடுகள் இடம் பெற்றதுடன்  நாளை தீர்தோற்சவம் நடை பெற்றவுள்ளது .
கருத்துரையிடுக

 
Top