முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் அரசாங்கத்திற்குமிடையில் பாரிய பிரச்சினை எதுவும் கிடையாது. அவ்வாறு மோதலை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியிலே முடிந்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜெனீவாவில் மு.கா. முன்வைத்துள்ள அறிக்கையிலுள்ள அனைத்து விடயங்களும் உண்மையல்ல என்று குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் இதில் அடங்குவதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்து வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மு.கா. அறிக்கையிலுள்ள ஒவ்வொரு விடயம் குறித்தும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அங்கு விளக்கமளித்துள்ளார். ஏதும் முறைப்பாடு கிடைத்தால் அதனடிப்படையில் நாட்டின் சட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த அறிக்கையிலுள்ள எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மையல்ல. ஐ.ம.சு.மு.வில் 16 கட்சிகள் உள்ளன. ஆசியாவில் உள்ள பெரிய கூட்டணி இது. ஐ.ம.சு.மு. ஜனநாயக கூட்டணியாகும். கூட்டணி கட்சிகளிடையே சிறுசிறு பிரச்சினை உள்ள போதும் சகலரதும் கருத்துக்களை கவனித்து ஜனாதிபதி செயற்படுகிறார்.

கருத்துரையிடுக

 
Top