ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றில் குண்டு வெடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் போலியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரோஹண தெரிவித்துள்ளார் .
 ஜனாதிபதியின் தலைமையில்  புத்தளம் ஷாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட்டம் திறக்கும் நிகழ்வில் குண்டு வெடிக்கவுள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு தமிழ் மாணவன் ஒருவனின் பெயரில் நேற்று (21) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்த மாணவனை வம்பில் மாட்டிவிடும் நோக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் . அதேவேளை இது சில மாணவர்களை மத்தியில் நிலவிய தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கடிதம் எழுதப் பட்டிருகிறது என குறித்த பாடசாலையின் ஏனைய மாணவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடிதத்தை மதுரங்குளி, கடயாமோட்ட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி  பயிலும் சக மூன்று மாணவர்கள்  எழுதிருக்கலாம்  எனவும்  பொலிசார் சந்தேகிக்கின்றனர்.எனினும் இந்த மாணவர்கள் தமது வீடுகளில் இல்லாமையால்   மேலதிக விசாரணைகளை பொலிஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது
 குறித்த குற்றத்தை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறாத நிலையில் சில ஊகங்களை தீர்மானமாக கொண்டு மேற்படி சம்பவத்தை இனவாத கண்ணோட்டத்துடன் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத் தக்கது.


Post a Comment

 
Top