இன்று காலை நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த அக்குரஸ்ஸ  வாலிபர் இருவரது ஜனாசாக்களும்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில் இருந்து சற்று முன்னர் உறவினர்களால் அவர்களது ஊருக்கு  எடுத்து செல்லப் பட்டுள்ளது .
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வை.எல்.யூஸுப்  மேற் கொண்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் இரண்டு ஜனாசாக்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்  பட்டுள்ளன .
சம்பவத்தில் மரணம் அடைந்தவர்கள் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த  24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ்  என்பவரும்,அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை  முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவருமாகும்.

கருத்துரையிடுக

 
Top