குளியாப்பிட்டியில் மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்று வரும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 27ம் திகதியுடன் நிறைவு பெறவிருந்த தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி மார்ச் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும், தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள், விஷேடமாக பாடசாலை மாணவ மாணவிகளின் வேண்டுகோளை அடுத்தே, தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சியை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top