இன்று காலை நிந்தவூரில் இடம் பெற்ற வாகன விபத்தில் அக்குரசயை சேர்ந்த இருவர் மரணமடைந்துள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது  வியாபார நோக்கத்தின் அடிப்படையில் அக்குரசை பிரதேசத்தில் இருந்து  வருகை தந்த இவர்கள் இருவரும் YN -2110 இலக்க முச்சக்கர வண்டியில் அக்கறை பற்றிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருக்கையில்  பின்னால் வந்த டிப்பர் வாகனம் முச்சக்கர  வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த சம்பவம்  இன்று 17.02.2014 காலை 6.15க்கு  காரைதீவுக்கும்  நிந்தவூருக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது . இவ்விபத்து சம்பவம் இடம் பெற்ற அதே இடத்தில் 106,பிரதான வீதி கோடா பிட்டிய ,அக்குரச எனும் முகவரியை சேர்ந்த  24 வயதுடைய முகமது ஹாலித் முஹம்மது நிப்ராஸ்  என்பவரும்,அதே முகமுகவரியை சேர்ந்த22 வயதுடை  முஹம்மது நஜீம் முஹம்மது ரினாஸ் என்பவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையிலும் இறந்துள்ளனர் 
இருவரது ஜனாஸா க்களும் தற்போது  கல்முனை அஷ்ரப் ஞாபகார்த வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . டிப்பர் சாரதி கைது செய்யப் பட்டு சம்மாந்துறை பொலிசாரினால் விசாரிக்கப் படுகின்றார்.

கருத்துரையிடுக

 
Top