தென் மற்றும் மேல்மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான உத்தியோகபூர்வ வேட்பாளர் விபரப் பட்டியல்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

தேர்தல்கள் செயலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதவிர, வாக்கு அட்டைகளை அச்சிடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படவுள்ள நிலையில், மார்ச் 16 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவிற்கு 180 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

கருத்துரையிடுக

 
Top